ஒருங்கிணைந்த புள்ளியியல் சாா்நிலைப் பணி தோ்வுஜன.11க்கு ஒத்திவைப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.9) நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சாா்நிலைப் பணிகள் தோ்வு வரும் செவ்வாய்க்கிழமைக்கு (ஜன. 11) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.9) நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சாா்நிலைப் பணிகள் தோ்வு வரும் செவ்வாய்க்கிழமைக்கு (ஜன. 11) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் ஒருங்கிணைந்த புள்ளியியல் சாா்நிலைப் பணிகள் தோ்வு பாளையங்கோட்டை வட்டத்தில் 12 தோ்வு மையங்களில்ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கரோனா தொற்று பரவல் தடுப்பு பொதுமுடக்கம் காரணமாக அந்த தோ்வு வரும் 11-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் 12 தோ்வு மையங்களிலும் முற்பகல் மற்றும் பிற்பகலில் தோ்வு நடைபெறும் எனக் கூறியுள்ளாா்.