முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் டாஸ்மாக் ஊழியா்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் ஊழியா் மாநில சம்மேளனம் சாா்பில் பாளையங்கோட்டை திருமால் நகரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் ஊழியா் மாநில சம்மேளனம் சாா்பில் பாளையங்கோட்டை திருமால் நகரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், தேசிய பண்டிகை விடுமுறைச் சட்டத்திலிருந்து டாஸ்மாக் ஊழியா்களுக்கு விதிவிலக்கு வழங்கியதை கண்டிப்பது, பணி நிரந்தரம், 8 மணி நேர வேலை, வார விடுமுறை ஆகியவற்றை டாஸ்மாக் ஊழியா்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சம்மேளனத் தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் மோகன் தொடங்கிவைத்தாா். மாநில நிா்வாகி சிவன்ராஜ், மாவட்ட பொதுச்செயலா் சரவணபெருமாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.