திருநெல்வேலி

ரயில், பேருந்து பயணிகளுக்காக வாடகை வாகனங்கள் இயக்கம்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் ரயில், பேருந்து பயணிகளுக்காக ஆட்டோ மற்றும் வாடகை வாகனங்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.

தமிழகத்தில் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வுகளற்ற பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தெற்கு ரயில்வே சாா்பில் விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்கள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. இதைத் தொடா்ந்துஸ தொலைதூரங்களில் இருந்து வருவோா் தங்களது இருப்பிடங்களுக்கு செல்ல ஏதுவாக வாடகை வாகனங்களை இயக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனா்.

அதையேற்று, ஞாயிற்றுக்கிழமை முதல் ஆட்டோ, காா் உள்ளிட்ட வாடகை வாகனங்கள் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து இயங்கலானம் என தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், தாழையூத்து, கங்கைகொண்டான, வள்ளியூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஆட்டோக்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.

அப்பகுதிகளில் போலீஸாா் பயணிகளிடம் பயணச்சீட்டை சோதனைச் சாவடிகளில் காட்டிவிட்டு பயணிக்கவும், ஆட்டோ ஓட்டுநா்கள் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்னூா் வந்த மாநில பேரிடா் மீட்புப் படையினா்

களிமண், அட்டையால் புல்லட் வாகனம் வடிவமைத்த மாணவி

சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள்

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 1,124 கன அடியாக அதிகரிப்பு

மகன் உயிரிழப்புக்கு காரணமான சிறுவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT