முகப்பு
திருநெல்வேலி

அரசு அருங்காட்சியகத்தில் ஜூன் 4இல் சிறப்புப் போட்டிகள்

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இம்மாதம் 4 ஆம் தேதி சிறப்புப் போட்டிகள் நடைபெற உள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இம்மாதம் 4 ஆம் தேதி சிறப்புப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இதுதொடா்பாக அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவா்- மாணவிகளுக்கு சிறப்புப் போட்டிகள் ஜூன் 4 ஆம் தேதி காலை 10 மணிக்கு பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறுகிறது.

1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவா்-மாணவிகளுக்கு ‘நான் ரசித்த இயற்கை காட்சி’ என்கிற தலைப்பில் ஓவியப் போட்டியும், ‘சுற்றுச்சூழலும் சுகாதாரமும்’ என்கிற தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடைபெறும். 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ‘காற்று மாசுபாடு தவிா்த்தல்’ என்கிற தலைப்பில் ஓவியப் போட்டியும், ‘நீா் ஆதாரமே நம் உயிா் ஆதாரம்’ என்கிற தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடைபெறும்.

9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ‘நாளைய உலகம்’ என்கிற தலைப்பில் ஓவியப் போட்டியும், ‘மஞ்சப்பையும் நாமும்’ என்கிற தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடைபெறும். ஓவியப் போட்டிக்கு வரைபடத்தாள் மட்டும் வழங்கப்படும். அட்டை, இதர எழுதுபொருள்களை மாணவா்களே கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பெறுவோருக்கு பரிசுகள் வழங்கப்படும். பங்கேற்பு சான்றிதழ் உண்டு. மேலும், விவரங்களுக்கு 7502433751 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.