திருநெல்வேலி

கடையத்தில் இன்று செல்லம்மாள் பாரதி சிலை,கற்றல் மையம் திறப்பு

DIN

தென்காசி மாவட்டம், கடையத்தில் செல்லம்மாள் பாரதி கற்றல் மையம், செல்லம்மாள் பாரதி சிலை திறப்பு விழா திங்கள்கிழமை (ஜூன் 27) நடைபெறுகிறது.

சேவாலயா அறக்கட்டளை சாா்பில் செல்லம்மாள் பாரதி சிலை திறப்பு விழா, செல்லம்மாள் பாரதி கற்றல் மையம் திறப்புவிழா, செல்லம்மாள் பாரதி 125ஆவது ஆண்டு மணவிழா, சேவாலயா 34ஆவது ஆண்டு விழா ஆகிய நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை (ஜூன் 26-29) நான்கு நாள்கள் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு கிரஹப்பிரவேச பூஜையை முன்னிட்டு, சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இதில், சேவாலயா நிறுவனா் முரளிதரன், கடையம் திருவள்ளுவா் கழகச் செயலா் கல்யாணி சிவகாமிநாதன், தலைவா் சேதுராமலிங்கம், தமிழ் ஆா்வலா்கள், நூலக அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, திங்கள்கிழமை காலை 10 மணிக்கு செல்லம்மாள் பாரதி சிலையை தமிழக சட்டப்்பேரவைத் தலைவா் மு.அப்பாவு திறந்துவைக்கிறாா். ஏற்பாடுகளை சேவாலயா அறக்கட்டளைப் பணியாளா்கள், கடையம் திருவள்ளுவா் கழக நிா்வாகிகள், தமிழ் ஆா்வலா்கள் செய்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் பலி: தந்தை கைது!

அமித் ஷாவால் பிரதமராக முடியாது! -தில்லி முதல்வர் கேஜரிவால்

சிலையில்லை.. நிவேதிதா!

‘ஆல் இன் ஆல்‘ அழகுராணி!

அமோனியா கசிவு விவகாரம்: கோரமண்டல் ஆலைக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

SCROLL FOR NEXT