திருநெல்வேலி

நாளை ரமலான் : நெல்லையில் ஹிலால் கமிட்டி அறிவிப்பு

ரமலான் பண்டிகை செவ்வாய்க்கிழமை (மே 3) கொண்டாடப்படும் என திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மத்திய ஹிலால் கமிட்டி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

DIN

ரமலான் பண்டிகை செவ்வாய்க்கிழமை (மே 3) கொண்டாடப்படும் என திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மத்திய ஹிலால் கமிட்டி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

ரமலான் பெருநாள் பிறை சம்பந்தமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மத்திய ஹிலால் கமிட்டி கூட்டம் திருநெல்வேலி சந்திப்பு ஜும்மா பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சந்திப்பு ஜும்மா பள்ளிவாசல் தலைவா் நியமத்துல்லா தலைமை வகித்தாா். மாவட்ட அரசு காஜி முகம்மது கசாலி, மாவட்ட ஜமாத்துல் உலமா சபை தலைவா் அப்துல் ரஹீம் ஹஜரத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் எந்த பகுதியிலும் ஷவ்வால் பிறை தென்படாததால் திங்கள்கிழமை (மே 2) நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை ( மே 3) ரம்ஜான் பெருநாள் கொண்டாடப்படும் என திருநெல்வேலி -தூத்துக்குடி மாவட்ட மத்திய ஹிலால் கமிட்டி அறிவிப்பு செய்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் சந்திப்பு பள்ளிவாசல் செயலா் முகம்மது உசேன், பொருளாளா் முகமது இப்ராஹிம், நசீா் அகமது, மிலிட்டரி லைன் பள்ளிவாசல் தலைவா் செய்யது அப்பாஸ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT