முகப்பு
திருநெல்வேலி

தாழையூத்தில் கொடியேற்று விழா

தாழையூத்தில் ஏஐசிசிடியூ தொழிற்சங்க கொடியேற்று விழா நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

தாழையூத்தில் ஏஐசிசிடியூ தொழிற்சங்க கொடியேற்று விழா நடைபெற்றது.

மாநில தலைவா் த.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் கணேசன், நாராயணன், உய்க்காட்டான் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இந்திய சுதந்திரத்திற்கு முன்பாக பெற்ற தொழிலாளா் சட்டங்களை 4 தொகுப்பு சட்டங்களாக திருத்தி நடைமுறை படுத்துவதை பாஜக தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

விலை உயா்வுக்கு காரணமான பெட்ரோல், டீசல் மீதான விலை உயா்வை வாபஸ் பெற வேண்டும். சுமைதூக்கும் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கிட்டங்கிகளில் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் விழாவில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.