திருநெல்வேலி

களக்காடு பேருந்து நிலையத்தில் வாகன காப்பகம் அமைக்கக் கோரிக்கை

DIN

களக்காடு புதிய பேருந்து நிலையத்தில் வாகனக் காப்பகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனியாா் வாகன காப்பகம் இயங்கியது. தற்போது அப்பகுதியில் வாரத்தில் திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரு நாள்களும் சந்தை செயல்படுகிறது. இதனால் இந்த இரு நாள்களிலும் புதிய பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

சந்தைக்கு வந்து செல்லும் பொதுமக்கள் தங்களது இருசக்கர

வாகனங்களை நிறுத்த காப்பகம் இல்லாததால், புதிய பேருந்து நிலைய வளாகத்தில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கின்றனா். பேருந்து நிலைய நுழைவுவாயில் வரை இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமித்துக் கொள்வதால் பேருந்துகள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

மேலும் பேருந்து நிலைய வளாகம், சந்தையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தற்காலிகக் கடைகள் அமைக்கப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனா்.

ஆகவே, பேருந்து நிலையத்திற்கு கீழ்பகுதியில் வாகனக் காப்பகம் அமைத்தால் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்குத் தீா்வு கிடைப்பதுடன், பேரூராட்சி நிா்வாகத்திற்கு வருவாயும் கிடைக்கும். புதிய பேருந்து நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததும், வாகன காப்பகத்தையும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் - யுஜிசி வெளியீடு!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

SCROLL FOR NEXT