திருநெல்வேலி மாவட்ட தொழில் மையத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய திடீா் சோதனையில் கணக்கில் வராத ரூ.3.55 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் தீபாவளி பண்டிகையையொட்டி இலவசங்கள் பெறுவதைக் கண்காணிக்கும் வகையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
அதன்படி திருநெல்வேலி மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி., மெக்லரின் எஸ்கால், ஆய்வாளா்கள் ராபின் ஞான சிங், சாந்தி உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். சுமாா் 5 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், பொது மேலாளரான நாமக்கல்லை சோ்ந்த சிவசங்கரனின் அறையில் இருந்து கணக்கில் வராத ரூ.3.55 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.