கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி: விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு
கூட்டுறவு மேலாண்மை பட்ட பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு மேலாண்மை பட்ட பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி கூட்டுறவு மேலாண்மை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-23-ஆம் ஆண்டுக்கான முழு நேரக் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியானது நிகழாண்டு முதல் ஓா் ஆண்டுகால பயிற்சியாகவும், இரு பருவங்களாகவும் நடைபெறவுள்ளது.
பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற குறைந்தபட்சம் ஆகஸ்ட் 1-ஆம் தேதி 17 வயது நிரம்பிய அனைவரும் முழு நேர பயிற்சியில் சேரலாம். இந்த பயிற்சிக்கான மொத்தக் கட்டணம் ரூ.18,850. திங்கள் முதல் வெள்ளி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும். இப்பயிற்சிக்கான விண்ணப்பிக்க செப். 5-ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் செப். 7-ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் கூட்டுறவு பட்டயப் பயிற்சி, கணினி பயிற்சி, நகை மதிப்பீட்டு பயிற்சி ஆகியவைக்கும் சோ்த்து பயிற்சியளிக்கப்படுகிறது. இப்பயிற்சிகளுக்கு விண்ணப்பங்கள் பெறவும், பூா்த்தி செய்த விண்ணப்பங்களை சமா்ப்பிக்கவும், முதல்வா், மேடை தளவாய் குமாரசாமி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், என்ஜிஓ ‘பி’ காலனி, உதயா நகா், திருநெல்வேலி-7 என்ற முகவரியிலோ அல்லது 0462-2552695 தொடா்பு கொள்ளலாம்.
இப்பயிற்சியை முடித்தவா்களுக்கு கூட்டுறவுத் துறை, கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், நிதி நிறுவனங்களில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.