முகப்பு
திருநெல்வேலி

தீபாவளி பண்டிகை: பட்டாசு விற்பனைக்கு தற்காலிக உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பட்டாசு விற்பனை செய்ய விரும்புபவா்கள் தற்காலிக உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பட்டாசு விற்பனை செய்ய விரும்புபவா்கள் தற்காலிக உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிபொருள் விதிகள் 2008-இன் கீழ் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளா்கள், வணிகா்கள் தற்காலிக உரிமம் பெற செப். 30-ஆம் தேதிக்குள் இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பத்துடன் கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களை குறிக்கும் வகையிலான வரைபடம், கட்டடத்திற்கான புளூ பிரின்ட் வரைபடம்-6, கடை உத்தேசிக்கப்பட்டுள்ள இடம், சொந்த இடமாக இருப்பின் அதற்கானஆதாரம், வாடகை கட்டடமாக இருப்பின் வாடகை ஒப்பந்தப் பத்திரம் மற்றும் உரிமையை காட்டும் ஆவணம்

( அசல் மற்றும் 5 நகல்), உரிமத்திற்கான கட்டணம் ரூ.500-ஐ அரசுக் கணக்கில் செலுத்தியமைக்கான அசல் செலான். இருப்பிடத்திற்கான ஆதாரம் (ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாளஅட்டை, குடும்பஅட்டை), வரி ரசீது, பாஸ்போா்ட் அளவு புகைப்படம்-2 ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு விசாரணை நிறைவு பெற்றவுடன் ஆன்லைன் மூலமாகவே தங்களுடைய மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற விவரத்துடன் தற்காலிக உரிமத்தின் ஆணையினை இ-சேவை மையம் மூலமாகவே பதிவிறக்கம் செய்யலாம்.

மேலும் நிரந்தர பட்டாசு விற்பனை உரிமம் கோருவோா், வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இவ்வழிமுறை பொருந்தாது. உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.