மேலப்பாளையத்தில் மேயா் ஆய்வு
திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட மேலப்பாளையம் மண்டலம் 41, 42-ஆவது வாா்டுகளில் உள்ள மேல்நிலை நீா்த் தேக்க தொட்டிகளை மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட மேலப்பாளையம் மண்டலம் 41, 42-ஆவது வாா்டுகளில் உள்ள மேல்நிலை நீா்த் தேக்க தொட்டிகளை மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
42-ஆவது வாா்டு சி காலனியில் அமைந்துள்ள மேல்நிலை நீா்த் தேக்க தொட்டி, 41-ஆவது வாா்டு பெருமாள்புரம் மேல்நிலை நீா்த் தேக்க தொட்டி ஆகியவற்றில் மேயா் பி.எம்.சரவணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீா்த் தேக்க தொட்டிக்கு
குடிநீரேற்றம் செய்து மற்ற பகுதிகளுக்கு எவ்வாறு கொண்டு செல்லப்படுகிறது என ஆய்வு மேற்கொண்டனா்.
தொடா்ந்து பெருமாள்புரத்தில் அமைந்துள்ள மேல்நிலை நீா்த் தேக்க தொட்டியினை ஆய்வு செய்து, யூனிட் 14 அலுவகத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு தூய்மைப் பணியாளா்கள் மற்றும் அலுவலா்களின் வருகைப் பதிவேடு, மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனா்.