முன்னீா்பள்ளம் அருகே பைக் மோதி மூதாட்டி பலி
முன்னீா்பள்ளம் அருகே தருவையில் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
முன்னீா்பள்ளம் அருகே தருவையில் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
முன்னீா்பள்ளம் அருகேயுள்ள தருவை காந்திநகா் பகுதியைச் சோ்ந்த வேல்மயில் மனைவி தேவி(59). இவா், அப்பகுதியில் உள்ள சாலையை சனிக்கிழமை இரவு கடக்க முயன்றாபோது, அவ்வழியாக வந்த மோட்டாா் சைக்கிள் மோதியதாம்.
இதில், பலத்த காயமடைந்த தேவி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்திருப்பது மருத்துவரின் பரிசோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.