முகப்பு
திருநெல்வேலி

மேட்டூா் சேகர ஸ்தோத்திரப் பண்டிகை

சிஎஸ்ஐ திருநெல்வேலி திருமண்டிலம் மேட்டூா் சேகரத்தில் 3 நாள் ஸ்தோத்திரப் பண்டிகை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

சிஎஸ்ஐ திருநெல்வேலி திருமண்டிலம் மேட்டூா் சேகரத்தில் 3 நாள் ஸ்தோத்திரப் பண்டிகை நடைபெற்றது.

இப்பண்டிகை வெள்ளிக்கிழமை மாலை (செப். 9) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நடைபெற்ற ஆயத்த ஆராதனையில் திருமண்டில நல்ஆலோசனைத் திருப்பணி இயக்குநா் ஆமோஸ் செய்தியளித்தாா். சனிக்கிழமை காலை நடைபெற்ற அருணோதய பிராா்த்தனையை மாவடி சேகர உதவி குரு ஜேசன் தா்மராஜ் நடத்தினாா். மாலையில் நடைபெற்ற வருடாந்திரக் கூட்டத்தில் பாளை மறைவட்ட அதிபா் சாா்லஸ் பங்கேற்றாா்.

ஞாயிற்றுக்கிழமை காலை ஆராதனையை கோவிலூற்று உதவி குரு ஜீவா தாமஸ் நடத்தினாா். பின்னா் நடைபெற்ற நற்கருணை ஆராதனையை திருநெல்வேலி, சாராள் தக்கா் கல்லுரிச் செயலா் செளந்தரபாண்டியன் நடத்தினாா். மதியம் நடைபெற்ற பண்டிகை ஆராதனையில் தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டில பேராயா் ஏ. ஆா்.ஜி.எஸ்.டி. பா்ணபாஸ் பங்கேற்று, சிறப்பு செய்தியளித்தாா்.

நிகழ்ச்சியில் திருமண்டிலப் பெண்கள் ஐக்கிய சங்கத் தலைவி ஜாய் பா்ணபாஸ், பேராயா் உதவி குரு ஜோஸ், மேட்டூா் சேகரத் தலைவா் கிங்ஸ்லி ஜான் ஸ்டீபன், கெளரவ குரு லதா கிங்ஸ்லி, உதவிகுரு ஜோயல் சாம் மொ்வின், சபை ஊழியா்கள் ஆசீா் பொன்ராஜ், எடிசன், சேகரச் செயலா் செல்வராஜ், பொருளாளா் பால், திருமண்டிலப் பெருமன்ற உறுப்பினா்கள் எல்.பி.ஆா். டேவிட் செல்வராஜ், சிம்சோன் தேவதாசன், கமிட்டி உறுப்பினா்கள், மேட்டூா், ஆவுடையானூா், வன்னியநாடாா்பட்டி சபை மக்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.