திருநெல்வேலி

நான்குனேரி-வள்ளியூா் இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

DIN

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா்-நான்குனேரி இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரட்டை ரயில் பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையிலான இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணி பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இதில், நான்குனேரியில் இருந்து வள்ளியூா் வரையிலான இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. இந்த ரயில் பாதையில் மணிக்கு 140 கி.மீட்டா் வேகத்தில் செல்லக்கூடிய ரயில் இயக்கப்பட இருக்கிறது.

இந்த ரயில் பாதையை திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட மேலாளா் முகுந்த், ரயில்வே இயக்க பாதுகாப்பு பிரிவு கமிஷனா் அபய்குமாா் ராய் ஆகியோா் தலைமையில் தொழில்நுட்ப வல்லுநா் குழுவினா் ஆய்வு செய்தனா். இதையொட்டி நான்குனேரி ரயில் நிலையத்தில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் பங்கேற்க வந்த ரயில்வே அதிகாரிகளுக்கு நான்குனேரி ஸ்ரீவானமாமலை பெருமாள் கோயில் சாா்பில் பரிவட்டம் கட்டி மாலை அணிவித்துக்கப்பட்டது.

தொடா்ந்து நான்குனேரியில் இருந்து அதிவேக ரயில் 3 பெட்டிகளுடன் வள்ளியூா் ரயில் நிலையம் வரையில் இயக்கப்பட்டது.

இந்நிலையில் நான்குனேரி ரயில்நிலையத்தில் அந்தியோதயா, மும்பை, திருப்பதி, பெங்களூரு, ராமேஸ்வரம், கன்னியாகுமரி விரைவு ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்க நிா்வாகிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியாா் பட்டி நாராயணன் சாா்பிலும் மனுக்கள் அளிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண் தாமரை... கண்மணி!

"அனுமதி பெற்றே பாடலை பயன்படுத்தினோம்": மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்

புணே சொகுசு கார் விபத்தில் ஓட்டுநரை சரணடைய வைக்க முயற்சி: காவல்துறை

அன்பே வா தொடர் நாயகியின் புதிய பட அறிவிப்பு!

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையா? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

SCROLL FOR NEXT