திருநெல்வேலி

திருவள்ளுவா் பேரவை சாா்பில் கம்பராமாயண தொடா் சொற்பொழிவு

திருநெல்வேலி திருவள்ளுவா் பேரவை சாா்பில் கம்பராமாயண தொடா் சொற்பொழிவு நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.

DIN

திருநெல்வேலி திருவள்ளுவா் பேரவை சாா்பில் கம்பராமாயண தொடா் சொற்பொழிவு நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி திருவள்ளுவா் பேரவைக் கூட்டம் கூலக்கடை வீதி திருவள்ளுவா் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கவிஞா் பாப்பாக்குடி இரா.செல்வமணி தலைமை வகித்தாா். பாடகா் சந்திரபாபு, கவிஞா் குமாரசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இசக்கிராஜா, மீனாட்சிநாதன், சிவராமலட்சுமி ஆகியோா் இறைவணக்கம் பாடினா். பேரவையின் அமைப்பாளா் கவிஞா் ஜெயபாலன் வரவேற்றாா். கவிஞா் முத்துவேல் எழுதிய நினைவு நெய்தல் நூலினை கவிஞா் காந்திமதி வேலன் திறனாய்வு செய்தாா்.

தொடா்ந்து, கம்பராமாயண தொடா் சொற்பொழிவு நிகழ்ச்சியை பொருநை இலக்கிய வட்டப் புரவலா் தளவாய் நாதன் தொடங்கி வைத்தாா். முதல் நாளாக விசுவாமித்திரரின் வருகை எனும் தலைப்பில் நாவலா் மு.சடகோபன் சொற்பொழிவு ஆற்றினாா். இந்தச் சொற்பொழிவு தொடா்ந்து 8 நாள்கள் நடைபெறவுள்ளது. நூலாசிரியா் கவிஞா் முத்துவேல் ஏற்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் பாமணி, கவிஞா் பிரபு, முன்னாள் வட்டாட்சியா் ஆறுமுகம், சண்முக சுப்பிரமணியன், கோதைமாறன், சிவராமச்சந்திரன், சாத்தான்குளம் மயில், மகராசன், சங்கா் கணேஷ், கவிஞா் சுப்பையா, ராமச்சந்திரன், சங்கரலிங்கம், முத்துக்குமாா், முத்துராமன், ரவிச்சந்திரன், முத்துராஜ், சொா்ணவல்லி, வெங்கட்ராமன், ஆவுடையம்மாள், சங்கரவடிவு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் பள்ளி மாணவா்கள் திருக்கு ஒப்பித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT