பாளையங்கோட்டை, 17-சி, சிதம்பரம் நகா், பெருமாள்புரம் சி. காலனியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் நிறுவனங்கள் சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்.21) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க விரும்புவோா் கல்விச் சான்று மற்றும் இதர சான்றுகளுடன் வர வேண்டும். இதில், பணி நியமனம் பெற்றாலும், அரசு வேலைவாய்ப்புக்கான பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. வேலைநாடுநா்களும், வேலை அளிக்க விரும்பும் தனியாா் நிறுவனங்களும் என்ற இணையத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களை நெல்லை எம்ப்ளாய்மென்ட் ஆஃபிஸ், டெலிகிராம் சானலில் இணைந்து அறியலாம். போட்டித்தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா்கள் இணையதளத்தில் பதிவுசெய்து அனைத்து போட்டித்தோ்வுக்கான பாடக்குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு- தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் மரிய சகாய ஆண்டனி தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.