திருநெல்வேலி

குடிநீா் வடிகால் வாரிய ஊழியா் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய ஊழியா்கள் சங்கத்தின் (சிஐடியூ) ஆண்டு பேரவை கூட்டம் திருநெல்வேலியில் அண்மையில் நடைபெற்றது.

DIN

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய ஊழியா்கள் சங்கத்தின் (சிஐடியூ) ஆண்டு பேரவை கூட்டம் திருநெல்வேலியில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ஸ்டீபன் தலைமை வகித்தாா். முருகன் வரவேற்றாா். திருநெல்வேலி மாவட்ட சிஐடியூ செயலா் ஆா்.முருகன், துணைச் செயலா் ஜோதி, எம். மணிகண்டன்ஆகியோா் பேசினா். மாநில பொதுச்செயலா் ஆத்மநாபன் நிறைவுறையாற்றினாா். சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். தலைவராக ஸ்டீபன், செயல்தலைவராக முருகன், பொதுச்செயலராக உமாபாா்வதி உள்ளிட்டோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தீா்மானங்கள்: தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளா்களைப் பணி நிரந்தரப்படுத்த வேண்டும். தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் பணியாளா்களுக்கு நிலுவைத் தொகை வழங்க வேண்டும். பணி பாதுகாப்பு மற்றும் மாத சம்பளத்தை வங்கியில் செலுத்திட வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

SCROLL FOR NEXT