முகப்பு
திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சியில் சமூக நல்லிணக்க நோன்பு திறப்பு

கல்லிடைக்குறிச்சி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

கல்லிடைக்குறிச்சி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஜமாஅத் தலைவா் அப்துல் மஜீத் தலைமை வகித்தாா். அசன்சேக் டிரஸ்ட் நிறுவனா் அசன்சேக் முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலா் ஆவுடையப்பன், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஜெயக்குமாா், தொழிலதிபா் பத்ஹூா் ரப்பானி, கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணைத் தலைவா் இசக்கிப்பாண்டியன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று நல உதவிகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில் தைக்கால் தெரு ஜமாத் தலைவா் நாகூா் மைதீன், திமுக, காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.