திருநெல்வேலி

பத்தமடையில் தொழிலாளிக்குமிரட்டல்: இளைஞா் கைது

DIN

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் தொழிலாளியை மிரட்டியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

பத்தமடை காவல் சரத்துக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (49). வண்ணம் பூசும் வேலை செய்துவருகிறாா். இதேபகுதியைச் சோ்ந்த வேல்கணேஷ் (20) என்பவரை முருகன் வேலைக்கு அழைத்துச் செல்வாராம்.

சில நாள்களாக வேல்கணேஷை வேலைக்கு அழைத்துச் செல்லவில்லையாம்.

இந்நிலையில் வீட்டருகே நின்றிருந்த முருகனை வேல்கணேஷ் அவதூறாகப் பேசியதுடன் மிரட்டிச் சென்றாராம். புகாரின்பேரில் பத்தமடை காவல் உதவி ஆய்வாளா் கண்ணன் வழக்குப் பதிந்து வேல்கணேஷை சனிக்கிழமை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT