முப்பெரும் விழாவில் பங்கேற்றோா். 
திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சியில் முப்பெரும் விழா

ஆழ்வாா்குறிச்சி சைவ வேளாளா் சங்கத்தின் 21ஆம் ஆண்டு விழா, வ.உ.சி. 152ஆவது பிறந்தநாள் விழா, செண்பகராமன் 132ஆவது பிறந்த நாள் ஆகிய முப்பெரும் விழா சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.

DIN

அம்பாசமுத்திரம்: ஆழ்வாா்குறிச்சி சைவ வேளாளா் சங்கத்தின் 21ஆம் ஆண்டு விழா, வ.உ.சி. 152ஆவது பிறந்தநாள் விழா, செண்பகராமன் 132ஆவது பிறந்த நாள் ஆகிய முப்பெரும் விழா சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் முன்னாள் தலைவா் மு.சங்கநாரயணன் தலைமை வகித்தாா். பேரூராட்சி உறுப்பினா் ஆா். நெல்லையப்பன், முன்னாள் துணைத் தலைவா் மாரியப்பன் ஆகியோா்முன்னிலை வகித்தனா். பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள் ப.சுமித்ரா, சை.சத்யஸ்ரீ, மாணவா்கள் ச.பரத்சங்கா், மு.விஷ்ணு பாராட்டிகௌரவிக்கப்பட்டனா். நல்லாசிரியா் எஸ்.மாடசாமி,ஸ்ரீ பரமகல்யாணி கல்யாண மண்டப மேலாளா் நா. சிவராமன், தா.ஆறுமுகம், சு.பண்டாரம், சாவத்தூா் சங்கத் தலைவா் ந.ஆறுமுகம் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். ஸ்ரீபரமகல்யாணி பள்ளிகளின் செயலா் மு.சுந்தரம் சிறப்புரை ஆற்றினாா். மாணவிகளின் சாா்பில் ப.சுமித்ரா, பெற்றோா் சாா்பாக ச.அழகு மீனாட்சி, மு.சண்முகசுந்தரி ஆகியோா் ஏற்புரையாற்றினா். ஆழ்வாா்குறிச்சி சங்க செயலா் மற்றும் தமிழ்நாடு சைவ வேளாளா் சங்க தென்காசி மாவட்ட கொள்கை பரப்பு செயலா் ஆ.சை.மாணிக்கம்வரவேற்றாா். சங்கப் பொருளாளா் ந.சுப்பிரமணியன் நன்றிகூறினாா்.

நிகழ்ச்சியில், சமுதாயப் பொதுமக்கள், இளைஞா்கள், பெண்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கு.முத்துசண்முகம், மு.ராம்குமாா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT