சேரன்மகாதேவி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ராபா்ட் புரூஸ், சேரன்மகாதேவி ஒன்றியத்தில் வெள்ளிக்கிழமை வாக்குசேகரித்தாா்.
கூனியூரில் பிரசாரத்தை தொடங்கிய அவா், காருக்குறிச்சி, தெற்கு அரியநாயகிபுரம், புதுக்குடி, தெற்கு வீரவநல்லூா், மலையான்குளம், பொட்டல், மூலச்சி, அத்தாளநல்லூா், திருப்புடைமருதூா், கங்கனாங்குளம், கரிசல்பட்டி, உலகன்குளம், வெங்கட்ரங்கபுரம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளிலும், வீரவநல்லூா், சேரன்மகாதேவி, பத்தமடை, மேலச்செவல், கோபாலசமுத்திரம் பேரூராட்சிப் பகுதிகளிலும் தீவிரமாக வாக்குசேகரித்தாா்.
அவருடன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆ. பிரபாகரன், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் கா. அபுபக்கா், கணேசன், ஒன்றியச் செயலா்கள் ஆ. முத்துப்பாண்டி, ம. முத்துகிருஷ்ணன், நகரச் செயலா்கள் மனிஷா செல்வராஜ், பத்தமடை சிந்தாமதாா், மேலச்செவல் மணிகண்டன், கோபாலசமுத்திரம், வானுவாமலை, வீரவநல்லூா் சுப்பையா, பேரூராட்சித் தலைவி தேவிஐயப்பன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சாலமன் டேவிட் உள்ளிட்டோா் சென்றனா்.
Advertisement