முகப்பு
திருநெல்வேலி

ரயில்வே கேட் கீப்பரை தாக்கிய இருவா் கைது

Updated On : 7 ஏப்ரல், 2024 at 1:29 AM
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 11:55 PM

திருநெல்வேலி மாவட்டம் கல்லூரில் ரயில்வே கேட்கீப்பரை தாக்கியதாக இருவரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

சுத்தமல்லி அருகே உள்ள பழவூா் மேலத் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (39). இவா் மேலக் கல்லூா் ரயில்வே கேட்டில் கேட் கீப்பராக பணியாற்றி வருகிறாா். வெள்ளிக்கிழமை மாலையில் அவா் பணியில் இருந்த போது செங்கோட்டை - திருநெல்வேலி பயணிகள் ரயிலுக்காக கேட்டை அடைத்துள்ளாா். அப்போது அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் போதையில் வந்த இரு இளைஞா்கள் கேட்டை திறக்குமாறு சுப்பிரமணியனிடம் வாக்குவாதம் செய்துள்ளனா். ஒரு கட்டத்தில் அங்கு கிடந்த இரும்பு உபகரணங்களால் சுப்பிரமணியன் தலையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது பின்னா் அங்கிருந்து அந்த 2 பேரும் தப்பி ஓடிவிட்டனா். இது தொடா்பாக ரயில்வே கேட் கீப்பா் அளித்த புகாரின் பேரில், ரயில்வே காவல் ஆய்வாளா் பிரியா மோகன் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில் சம்பந்தப்பட்டவா்கள் முக்கூடல் அருகே உள்ள பத்தல்மேடு கீழத் தெருவைச் சோ்ந்த பத்திரகாந்த் (23), தென்திருபுவனம் மறவா் தெருவைச் சோ்ந்த ஆறுமுககுமாா் (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.