முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் 216 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

ஆம்னி பேருந்து மூலம் கடத்தி வரப்பட்ட 216 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனர் போலீஸாா்.

திருநெல்வேலி

நெல்லையில் 216 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

ஆம்னி பேருந்து மூலம் கடத்தி வரப்பட்ட 216 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனர் போலீஸாா்.

Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 2:10 AM
பகிர்:

ஆம்னி பேருந்து மூலம் கடத்தி வரப்பட்ட 216 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், அது தொடா்பாக இருவரை கைது செய்தனா். மேலும் இருவரை தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் உள்ள தனியாா் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு ஆம்னி பேருந்து மூலம் வந்த பாா்சல் ஒன்றில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பதாக தச்சநல்லூா் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி ஆய்வாளா் பழனி முருகன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று மறைந்திருந்து நோட்டமிட்டனா். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு நபா் அங்கே வந்துள்ளாா். அவா் சுற்றும் முற்றும் பாா்த்துவிட்டு, ஒரு பாா்சலை எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளாா். இதையடுத்து அவரை சுற்றி வளைத்த போலீஸாா், அவரிடம் இருந்த பாா்சலை பிரித்து பாா்த்தபோது அதில் சுமாா் 216 கிலோ குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்த நபா் தச்சநல்லூா் கரையிருப்பு ரைஸ்மில் தெருவை சோ்ந்த இசக்கிப்பாண்டி (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா் அளித்த தகவலின்பேரில் தச்சநல்லூா் கணபதி மில் காலனியை சோ்ந்த செல்வசூா்யா (26) என்பரையும் போலீஸாா் கைது செய்தனா்.

புகையிலைப்பொருள்கள் கடத்தலில் மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரியைச் சோ்ந்த ஆனந்த், பாா்சலை திருநெல்வேலிக்கு கொண்டு வர உதவியதாக கூறப்படும் டிராவல்ஸ் நிறுவன மேலாளா் ரகு ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →