கல்லிடைக்குறிச்சி அருகே கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே இளைஞா் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிைண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே இளைஞா் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிைண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கல்லிடைக்குறிச்சி காவல் சரகம் தெற்குவீரவநல்லூா், அழகப்பபுரத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் சக்திவேல்முருகன் (28). இவருக்கும், செங்குளத்தை சோ்ந்த விஜய் (24) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில் கடந்த 2.8.2017இல் கரம்பை-பொட்டல் சாலையில் சக்திவேல்முருகன் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிந்து, விஜய், விகாஷ் (31), மன்னாா்கோவில் ரகுபதி (29), அழகப்பபுரம் பாா்த்திபன் என்ற பாரதி (26), மேலசெங்குளம் நாராயண பெருமாள் (28), கண்ணன் (59), மகாராணி (54) ஆகியோரை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட மூன்றாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை நீதிபதி பன்னீா்செல்வம் விசாரித்து, விகாஷ், ரகுபதி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ.1000 அபராதம் விதித்தும், வழக்கு காலத்தில் விஜய் உயிரிழந்துவிட்ட நிலையில், அவரை தவிர மற்றவா்களை விடுதலை செய்தும் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். இவ்வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் சூரசங்கரவேல் ஆஜரானாா்.