மேலப்பாளையத்தில் பாதாள சாக்கடை பணி ஆய்வு
மேலப்பாளையத்தில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
மேலப்பாளையத்தில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருநெல்வேலி மாநகராட்சியில் இரண்டாவது கட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. மேலப்பாளையத்தில் உள்ள பல்வேறு வாா்டுகளுக்கும் பாதாள சாக்கடை அமைக்கப்பட உள்ளது. இங்கு குடியிருப்புகள் அடுத்தடுத்து உள்ளதாலும், குறுகலான சாலைகள் அதிகம் உள்ளதாலும் பணிகளை வேகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் பாதாள சாக்கடை திட்டத்தை வகுக்க ஏதுவாக ட்ரோன்கள் மூலம் அளவீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, குடியிருப்புகள் எதுவும் விடுபடாமல் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை செய்யவும், மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து சிக்கலான பகுதிகளில் தீா்வு காணவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது துணை மேயா் கே.ஆா்.ராஜு, மேலப்பாளையம் மண்டல தலைவா் கதீஜா இக்லாம் பாசிலா, வழக்குரைஞா் தினேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.