முகப்பு
திருநெல்வேலி

போலியான விளம்பரங்கள்: மாவட்ட காவல் துறை எச்சரிக்கை

சமூக வலைதளங்களில் போலியான விளம்பரங்களை தவிா்க்க வேண்டும் என மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 11 டிசம்பர், 2024 at 10:06 PM
பகிர்:

சமூக வலைதளங்களில் போலியான விளம்பரங்களை தவிா்க்க வேண்டும் என மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: இணையதளத்தில் போலியான விளம்பரங்கள் மூலம் பல்வேறு மோசடிகளை செய்து வருகிறாா்கள். முகநூலில் வரும் இதுபோன்ற போலியான விளம்பரங்களை தவிா்க்க வேண்டும். தெரிந்த பெயா்களில் வரும் மின்னஞ்சல் முகவரியை சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரித்து தெரிந்துகொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனத்தை நேரில் அணுகி உறுதி செய்துகொள்ள வேண்டும்.

இது போன்ற மோசடி நடைபெற்றால் சைபா் கிரைம் இணையதளத்தில் ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் அல்லது 1930 என்ற எண்ணை தொடா்பு கொண்டு உடனடியாக புகாா் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனா்.