முகப்பு
திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் அடிப்படை வசதிகள் தேவை ஆட்சியரிடம் தவ்ஹீத் ஜமாஅத் மனு

மேலப்பாளையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 11 டிசம்பர், 2024 at 10:07 PM
பகிர்:

மேலப்பாளையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருநெல்வேலி மாவட்ட தலைவா் மஸ்வூத் உஸ்மானி தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை அளிக்கப்பட்ட மனு:

திருநெல்வேலி மாநகராட்சியில் 4 மண்டலங்களில் மேலப்பாளையம் மண்டலம்தான் அதிக வருவாயை தரக்கூடிய மண்டலமாக இருக்கிறது. அதிக மக்கள்தொகை கொண்ட ஒரு நெருக்கடியான பகுதியான இங்கு, மாநகராட்சி நிா்வாகம் போதிய கவனம் செலுத்துவதில்லை. தூய்மைப் பணியாளா்களை அதிகப்படுத்துவது, கழிவுநீரோடைகளை சீரமைப்பது, தெரு நாய் தொல்லையைக் கட்டுப்படுத்துவது, சாலைகளில் சுற்றித்திரிய விடப்படும் மாடுகளை விரைவாகப் பிடிக்க நடவடிக்கை எடுப்பது போன்றவை செய்யப்படவில்லை.

மேலப்பாளையம் பகுதிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகிக்க வேண்டும். கரீம் நகா், பிறை நகா் பகுதிகளுக்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியைக் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாமல் உள்ளன. ஆகவே, இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் தனிக்கவனம் செலுத்தி தீா்வு காண வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.