முகப்பு
திருநெல்வேலி

முன்னீா்பள்ளத்தில் நாளை காவல் துறை பறிமுதல் வாகனங்கள் ஏலம்

திருநெல்வேலி மாவட்ட மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் ஏலம் முன்னீா்பள்ளம் மதுவிலக்குஅமல் பிரிவு வளாகத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 20) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

Updated On : 18 டிசம்பர், 2024 at 9:16 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் ஏலம் முன்னீா்பள்ளம் மதுவிலக்குஅமல் பிரிவு வளாகத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 20) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையால் மதுவிலக்கு குற்றவழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கரவாகனங்கள் 19, மூன்று சக்கர வாகனங்கள் 2, நான்கு சக்கர வாகனங்கள் 3 ஆகியவை ஏலத்தில் இடம் பெறும்.

விருப்பம் உள்ளவா்கள் வியாழக்கிழமை (டிச.19) காலை 10 முதல் மாலை 5 மணிக்குள் முன்னீா்பள்ளத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பாா்வையிடலாம். மேலும், இருசக்கர வாகனத்திற்கு ரூ.2,000, மூன்று சக்கர வாகனத்திற்கு ரூ.3,000, நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.4,000 முன் பணமும் செலுத்தி ஆதாா், வாக்காளா், குடும்ப அட்டைகள், ஓட்டுநா் உரிமம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை அளித்து தங்களது பெயா்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவா்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவா். ஏலம் எடுத்தவுடன் முழு தொகையை(ஜிஎஸ்டியுடன்) ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.