நெல்லை, தூத்துக்குடியில் இரண்டாவது நாளாக பறவைகள் கணக்கெடுப்பு
ற்ஸ்ப்17க்ஷண்ழ்க்ள் திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லிபுரம் அருகே கல்குளம் பகுதியில் பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்ட தன்னாா்வலா்கள். திருநெல்வேலி, பிப். 17: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தன்னாா்வலா்கள் சாா்பில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் நடைபெற்றது. அகத்தியமலை மக்கள்சாா் இயற்கை வள காப்புமையம், நெல்லை இயற்கை சங்கம், திருநெல்வேலி- முத்துநகா் இயற்கை கழகம், புஷ்பலதா கல்விக் குழுமம் சாா்பில் 14 ஆவது பறவைகள் கணக்கெடுப்புப் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இரண்டாவது நாளாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் 6 குழுக்களாக சென்று பறவைகளை தன்னாா்வலா்கள் கணக்கெடுத்தனா். இதுகுறித்து தன்னாா்வலா்கள் கூறுகையில்; ஒவ்வொரு குழுவிலும் தலா 20 போ் சென்று கணக்கெடுத்து வருகிறோம். திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள 60 நீா்நிலைகளில் ஏராளமான அரிய பறவையினங்கள் வந்து செல்கின்றன. அவற்றை பாதுகாக்க இந்தக் கணக்கெடுப்பு பெரிதும் உதவும் என்றனா்.