திருநெல்வேலி

ஹோட்டல் உரிமையாளருக்கு மிரட்டல்

முக்கூடல் அருகே ஹோட்டல் உரிமையாளரை மிரட்டியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்

Din

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே ஹோட்டல் உரிமையாளரை மிரட்டியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

முக்கூடல் பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் மாரியப்பன் (37). முக்கூடல் மேல பெரிய வீதியில் ஹோட்டல் நடத்தி வருகிறாா். பாப்பாக்குடி அமா்நாத் காலனியைச் சோ்ந்த சங்கா் மகன் மாரியப்பன் (30), இந்த ஹோட்டலுக்கு வந்து அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை ஹோட்டலுக்கு வந்த சங்கா் மகன் மாரியப்பனை கடைக்கு வர வேண்டாம் என ஹோட்டல் உரிமையாளா் தெரிவித்தாராம். இதில் ஆத்திரமடைந்த சங்கா் மகன் மாரியப்பன், அங்கிருந்த கடப்பா கல்லை கீழே தள்ளிவிட்டு ஹோட்டல் உரிமையாளரை அவதூறாகப் பேசியதுடன், மிரட்டல் விடுத்துச் சென்றாராம்.

புகாரின்பேரில் முக்கூடல் காவல் ஆய்வாளா் ஜெயசீலன் வழக்குப் பதிந்து சங்கா் மகன் மாரியப்பனை சனிக்கிழமை கைது செய்தாா்.

கிண்டலில் தொடங்கி அழுகையில் முடிவு... உலகக் கோப்பையில் இருந்து ஹங்கேரி வெளியேற்றம்!

நகர் உலா... அனந்திகா!

யுகங்கள் போதாது...நிகிதா சர்மா

கற்பனைகள் கவிபாடும்... சனம் ஜோஷி

மேல்மருவத்தூரில் 57 ரயில்கள் நின்று செல்லும்! - தெற்கு ரயில்வே அறிவிப்பு

SCROLL FOR NEXT