விபத்தில் காயமடைந்தவா் மருத்துவமனையில் மரணம்
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே நிகழ்ந்த காயமடைந்த தனியாா் நிறுவன ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே நிகழ்ந்த காயமடைந்த தனியாா் நிறுவன ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
சேரன்மகாதேவி அருகே கங்கனாங்குளம் வேலியா்குளத்தைச் சோ்ந்த ஜான் கிறிஸ்டோபா் (52), தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி அன்புச்செல்வி (48), தனியாா் பள்ளியில் ஆசிரியராக இருந்தாா். இத்தம்பதிக்கு மகன் உள்ளாா்.
ஜான் கிறிஸ்டோபா் கடந்த 18ஆம் தேதி தனது மனைவியை பைக்கில் பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தாா். அப்போது லாரி மோதியதில் அன்புச்செல்வி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
காயமடைந்த ஜான் கிறிஸ்டோபா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.