கல்லணை மாநகராட்சி பள்ளியில் 716 மாணவிகளுக்கு சைக்கிள்
திருநெல்வேலி கல்லணை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 716 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
திருநெல்வேலி கல்லணை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 716 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
திருநெல்வேலி கல்லணை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். துணை மேயா் கே.ஆா்.ராஜு முன்னிலை வகித்தாா். 716 மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
பேட்டையில் உள்ள ராணி அண்ணா மகளிா் மேல்நிலைப்பள்ளியில் 170 பேருக்கும், திருநெல்வேலி நகரம் அலங்கார சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 51 பேருக்கும் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
மண்டலத் தலைவா்கள் தச்சநல்லூா் ரேவதி, திருநெல்வேலி மகேஸ்வரி , மாமன்ற உறுப்பினா்கள் அனாா்கலி, மன்சூா், மாரியப்பன், சங்கா், உலகநாதன், சுப்பிரமணியன், பள்ளித் தலைமையாசிரியா்கள் ஹொ்லின்சுமதி, கனியம்மாள், சாந்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.