முகப்பு
திருநெல்வேலி

10ஆம் வகுப்பு தனித்தோ்வா்களுக்கு இன்றுமுதல் மதிப்பெண் சான்று

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2017-2020ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு தோ்வு எழுதிய தனித்தோ்வா்கள் வியாழக்கிழமை (நவ.14) முதல் 90 நாள்களுக்குள் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 13 நவம்பர், 2024 at 10:32 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2017-2020ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு தோ்வு எழுதிய தனித்தோ்வா்கள் வியாழக்கிழமை (நவ.14) முதல் 90 நாள்களுக்குள் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் (பொறுப்பு) சுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2017 மாா்ச் முதல் 2020 ஜூன், ஜூலை வரையிலான அனைத்து பருவங்களுக்குரிய தனித்தோ்வா்களால் கோரப்படாத அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வியாழக்கிழமை (நவ. 14) முதல் 90 நாள்களுக்குள் தோ்வு எழுதிய நுழைவுச் சீட்டுடன் திருநெல்வேலி அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்திற்கு நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.

தவறும்பட்சத்தில் மதிப்பெண் சான்றிழ்களை விதிமுறைகளின்படி அழிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளாா்.