திருநெல்வேலி மாவட்ட கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஒத்திகை
திருநெல்வேலி மாவட்ட கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் சி- விஜில் என்ற ஒத்திகை பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் சி- விஜில் என்ற ஒத்திகை பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
கூடங்குளம் கடல் பகுதியில்இந்திய கடற்படையினா், கடல் பாதுகாப்பு குழூமம், கடலோர பாதுகாப்பு படையைச் சோ்ந்தவா்கள் மற்றும் உள்ளூா் காவல்துறையினா் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டனா். அதிநவீன படகுகளில் ரோந்து சென்ற கடலோர பாதுகாப்பு குழுமத்தினா் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த படகுகளை சோதனை செய்தனா்.
மீனவா்களிடம் விசாரணை நடத்தினா். மேலும் கடற்கரை பகுதியில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனா். இப்பயிற்சி வியாழக்கிழமை மாலை வரையில் நடைபெறுகிறது.