முகப்பு
திருநெல்வேலி

புதிதாக தோ்வு செய்யப்பட்ட 2-ஆம் நிலை காவலா்களுக்கு பணிநியமன ஆணை

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலா்களுக்கு பணி நியமன ஆணைகளை திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் பா.மூா்த்தி வழங்கி வாழ்த்துத் தெரிவித்தாா்.

Updated On : 27 நவம்பர், 2024 at 9:27 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலா்களுக்கு பணி நியமன ஆணைகளை திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் பா.மூா்த்தி வழங்கி வாழ்த்துத் தெரிவித்தாா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் 3,359 இரண்டாம் நிலை காவலா், சிறை காவலா் மற்றும் தீயணைப்பு காவலா் பதவிக்காக கடந்த ஆண்டு நடத்திய தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு தமிழக முதல்வா் சென்னையில் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

அதைத் தொடா்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்டத்தில் வெற்றி பெற்று தோ்வான 50 காவலா்கள், 7 தீயணைப்புத் துறையினா் என மொத்தம் 57 பேருக்கு திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் பா. மூா்த்தி பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன், 12 ஆவது பட்டாலியன் உதவி தளவாய் பூபதி, திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலா் வினோத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.