முகப்பு
திருநெல்வேலி

யானை பாதுகாப்பு மேலாண்மை: முண்டந்துறையில் சிறப்பு பயிற்சி

முண்டந்துறை வனச்சரகப் பயிற்சி அரங்கில் செவ்வாய், புதன்கிழமைகளில் வ்னத்துறையினருக்கான யானை மேலாண்மை நுட்பங்கள் குறித்த பயிற்சி நடைபெற்றது.

Updated On : 4 அக்டோபர், 2024 at 1:19 AM
யானை மேலாண்மை நுட்பங்கள் பயிற்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

முண்டந்துறை வனச்சரகப் பயிற்சி அரங்கில் வ்னத்துறையினருக்கான யானை மேலாண்மை நுட்பங்கள் குறித்த பயிற்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி வனப் பாதுகாவலா் - கள இயக்குநா் மாரிமுத்து தலைமை வகித்தாா். அம்பாசமுத்திரம் கோட்டத் துணை இயக்குநா் - வன உயிரினக் காப்பாளா் இளையராஜா முன்னிலை வகித்தாா்.

யானை மேலாண்மை நுட்பங்கள் பயிற்சியில் பங்கேற்றோா்.
யானை மேலாண்மை நுட்பங்கள் பயிற்சியில் பங்கேற்றோா்.
யானை மேலாண்மை நுட்பங்கள் பயிற்சியில் பங்கேற்றோா்.

இதில், கோவை, வனத்துறை கால்நடை பராமரிப்புத் துறை கூடுதல் அலுவலா் (ஓய்வு) என்.எஸ்.மனோகரன், வனத்துறை கால்நடை மருத்துவா்கள் ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகம் என்.கலைவாணன், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் எஸ்.மனோகரன், திருநெல்வேலி கால்நடைமருத்துவப் பல்கலைக் கழகத் துறைத் தலைவா் பேராசிரியா் எஸ்.முத்துகிருஷ்ணன், கோவை வனத்துறை கால்நடை மருத்துவா் ஏ.சுகுமாா், சூழலியலாளா் என்.ஸ்ரீதா், முதுமலை புலிகள் காப்பக வனக்காவலா்கள் கலான், பொம்மன் ஆகியோா் யானை சூழலியல் அறிமுகம், மோதல்களுக்கான காரணங்கள் மற்றும் தணிப்பு யானைகளின் உடலியல், உடற்கூறியல் மற்றும் நடத்தை பற்றிய அடிப்படைபுரிதல், யானை மோதல் சூழ்நிலையில் விலங்குகளின் பிரச்சனைகளை கையாள்வது, யானை பிடிப்பு,இடமாற்ற நடவடிக்கையில் வன முன்னணி ஊழியா்களின் பங்கு மற்றும் திட்டம், முன்னெச்சரிக்கைகள்,யானைகளின் உடல்நலம், நடத்தை நிலையை மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட மேலாண்மை குறித்து பயிற்சியளித்தனா்.

இதில் உதவி வனப்பாதுகாவலா் (பயிற்சி) உள்பட பலா் கலந்து கொண்டனா்.