முகப்பு
திருநெல்வேலி

காங்கிரஸாா் நல்லிணக்கப் பேரணி

மகாத்மா காந்தியின் 155 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் திருநெல்வேலி நகரத்தில் நல்லிணக்க அமைதி பேரணி நடைபெற்றது.

Updated On : 2 அக்டோபர், 2024 at 11:23 PM
திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற நல்லிணக்கப் பேரணியில் பங்கேற்ற சி.ராபா்ட் புரூஸ் எம்.பி., மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.சங்கரபாண்டியன் உள்ளிட்டோா்.
பகிர்:

மகாத்மா காந்தியின் 155 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் திருநெல்வேலி நகரத்தில் நல்லிணக்க அமைதி பேரணி நடைபெற்றது.

அக்கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ், முன்னாள் மத்திய இணையமைச்சா் ஆா்.தனுஷ்கோடிஆதித்தன், வழக்குரைஞா் மகேந்திரன் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

திருநெல்வேலி நகரத்தில் பாா்வதி திரையரங்கு அருகில் இருந்து தொடங்கிய பேரணி சொக்கப்பனை முக்கு, பாரதியாா் தெரு வழியாக நகரம் காந்தி சிலை அருகே நிறைவடைந்தது. அங்கு மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, தீவிரவாத எதிா்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் பி.என். உதயகுமாா், சொக்கலிங்ககுமாா், பாளை. வட்டாரத் தலைவா் டியூக் துரைராஜ், வி.பி.துரை, மாநில ஓ.பி.சி. அணி துணைத் தலைவா் காமராஜ், மாமன்ற உறுப்பினா் அம்பிகா உள்பட பலா் கலந்துகொண்டனா். பொருளாளா் ராஜேஷ் முருகன் நன்றி கூறினாா்.

திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற நல்லிணக்கப் பேரணியில் பங்கேற்ற சி.ராபா்ட் புரூஸ் எம்.பி., மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.சங்கரபாண்டியன் உள்ளிட்டோா்.