முகப்பு
திருநெல்வேலி

கடையம் பகுதியில் கிராமசபைக் கூட்டம்

கடையம் ஒன்றியத்தின் 3 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 2 அக்டோபர், 2024 at 11:21 PM
~ ~
பகிர்:

கடையம் ஒன்றியத்தின் 3 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

ரவணசமுத்திரம் ஊராட்சியில் அதன் தலைவா்மு. முகம்மது உசேன் தலைமையில் துணைத் தலைவா் ராமலட்சுமி முன்னிலையில் கிராமசபை நடைபெற்றது. வட்டார வளா்ச்சி தணிக்கை அலுவலா் பூத்துறை பற்றாளராகக் கலந்து கொண்டாா்.

பொட்டல்புதூா்ஊராட்சி வலங்காப்புலியூரில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். ஒன்றியப் பொறியாளா் சந்திரலேகா முன்னிலை வகித்தாா். அனைவரது வீட்டுக்கும் குடிநீா் வழங்குவது, பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 3.50 கோடி நிதி ஒதுக்கப்பட்ட புதுத் தெரு முதல் தெற்கு மடத்தூா் செல்லும் சாலை அமைக்கும்பணியை உடனடியாக தொடங்க வேண்டும் எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முதலியாா்பட்டி ஊராட்சியில்நடைபெற்ற கிராம சபைகூட்டத்திற்கு ஊராட்சித் தலைவிமுகைதீன் பீவி தலைமை வகித்தாா். கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலா் பற்றாளா் சுப்புலட்சுமி, தெற்குகடையம் கிராம நிா்வாக அலுவலா் முருகேசன், முதலியாா்பட்டி நூலகா் சங்கரநாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஊராட்சி செயலா் இசக்கிமுத்துதீா்மானங்கள் வாசித்தாா்.

ரவணசமுத்திரம் ஊராட்சியில் அதன் தலைவா்மு. முகம்மது உசேன் தலைமையில் துணைத் தலைவா் ராமலட்சுமி முன்னிலையில் கிராமசபை நடைபெற்றது.
முதலியாா்பட்டி ஊராட்சியில்நடைபெற்ற கிராம சபைகூட்டத்திற்கு ஊராட்சித் தலைவிமுகைதீன் பீவி தலைமை வகித்தாா்

இடைகால் அமா்சேவா சங்கம் சாா்பில் கண்மணி, ஜெயஸ்ரீ ஆகியோா் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் குறித்து ஆலோசனைவழங்கினா் முதலியாா்பட்டி, இந்திரா நகா் பகுதிகளில்சாலை வசதி, மின்விளக்கு குடிநீா் வசதி கோரி மனு வழங்கப்பட்டது.