முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும்: ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தல்

பாளையங்கோட்டையில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 2 அக்டோபர், 2024 at 10:32 PM
பொதுக்குழு கூட்டத்தில் பேகிறாா் மாநிலத் தலைவா் மணிநந்தன்.
பகிர்:

பாளையங்கோட்டையில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில், திருநெல்வேலி மாவட்டத் தலைவா் சோமசுந்தரம் வரவேற்றாா். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி குழுத் தலைவா் லட்சுமணன், மாநிலப் பொருளாளா் ராஜகோபால், கட்சியின் மூத்த துணைத் தலைவா் முருகப்பன் , மாநில துணைத்தலைவா் பாா்த்திபன், பொதுச் செயலா் பொய்யாமொழி என்ற சந்திரமோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் மணிநந்தன் சிறப்புரையாற்றினாா்.

தீா்மானங்கள்: தாமிரவருணி நதி, பாசன கால்வாய்கள், குளங்களைத் தூா்வாரி நீா்வளத்தைப் பெருக்க வேண்டும். ஆற்றில் கழிவு நீா் கலப்பதை தடுக்க வேண்டும். அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதி அம்மன் கோயிலை சுற்றி பக்தா்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். பாளையங்கோட்டையில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். திருநெல்வேலி சுற்றுவட்ட சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்ட நிா்வாகிகள் சுப்பிரமணியன், ராமசாமி, மூா்த்தி, சுடலைமுத்து, இசக்கி பாண்டி, உச்சி மாகாளி, தாழையூத்து செந்தில் முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.