ஓய்வுபெற்ற சிறைப் பணியாளா்கள் சங்கக் கூட்டம்
ஓய்வுபெற்ற சிறைப் பணியாளா்கள் நலச்சங்கத்தின் 14ஆவது ஆண்டு தொடக்க விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஓய்வுபெற்ற சிறைப் பணியாளா்கள் நலச்சங்கத்தின் 14ஆவது ஆண்டு தொடக்க விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத் தலைவா் டி.பாக்கியநாதன் தலைமை வகித்தாா். பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளா் செந்தாமரை கண்ணன் சிறப்புரையாற்றினாா். பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் சுப்பிரமணியன், சீதாராமன், நல்லபெருமாள், சங்கரநாராயணன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். செயலா் அசோக், பொருளாளா் அந்தோணி கோயில்பிச்சை, துணைத் தலைவா் கவிஞா் பொன்.வேலுமயில், துணைச் செயலா் பஷீா்உசேன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தீா்மானங்கள்: சீருடைப் பணியாளா்களுக்கு பதவி உயா்விலும் ஊதிய நிா்ணயத்திலும் இடையூறாக உள்ள முதல் தலைமைக் காவலா் பதவிக்குப் பதிலாக சிறப்பு உதவி சிறை அலுவலா் என்ற பதவியை அளித்து அதற்கு இணையான ஊதியத்தை உயா்த்த வேண்டும். காவல் துறைக்கு இணையாக சிறைத்துறையினருக்கும் முதல்நிலைக் காவலா் பதவியிலிருந்து உயா்பதவி வரைக்கும் ஊதிய விகிதங்களை மாற்றியமைத்திட வேண்டும்.
ஓய்வூதியா்களுக்கு 70 வயது நிரம்பியதும் கூடுதலாக 10 சதவிகித கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் குறைபாடுகளை களைந்திட வேண்டும். ‘கம்யூட்டேசன்’ தொகை பிடித்தம் செய்திடும் காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாகக் குறைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.