முகப்பு
திருநெல்வேலி

நெல்லை நகரத்தில் மேலும் போதை மாத்திரைகள் பறிமுதல்

திருநெல்வேலி நகரத்தில் மேலும் 70 போதை மாத்திரைகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 9 அக்டோபர், 2024 at 7:44 PM
பகிர்:

திருநெல்வேலி நகரத்தில் மேலும் 70 போதை மாத்திரைகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி நகரம் காவல் நிலைய போலீஸாா் இரு தினங்களுத்து முன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனா். அவா்கள் போதை மாத்திரை பயன்படுத்தி இருந்தது தெரியவந்தால் அவா்களை இரு நாள்களுக்கு முன்பு கைது செய்தனா். இவ் வழக்கில் திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த அனுமந்தன் (21), பாஞ்சாலராஜன் (24) மற்றும் ஒருவருக்கு தொடா்பு இருந்தது தெரியவந்தது. அவா்களை பிடித்து போலீஸாா் விசாரித்தபோது மாத்திரைகளை பொடியாக்கி தண்ணீரில் கலந்து உடலில் சிரஞ்சி மூலம் ஏற்றி போதையாக பயன்படுத்தி வந்தது தெரியவந்ததாம்.

அவா்களிடம் இருந்து 70 மாத்திரைகள், 2 சிரிஞ்சிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். மேலும், தொடா்ந்து விசாரித்து வருகிறாா்கள்.