முகப்பு
திருநெல்வேலி

வள்ளியூா் அருகே தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் திருட்டு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 9 அக்டோபர், 2024 at 7:39 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வள்ளியூா் அருகே மடப்புரத்தில் செயல்படும் அக் கல்லூரியின் அறையில் வைக்கப்பட்டிருந்த கட்டுமானப்பொருட்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக கல்லூரி முதல்வா் பாலசுப்பிரமணியன் வள்ளியூா் காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.