குண்டா் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு
திருநெல்வேலி மாநகரில் இருவா் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருநெல்வேலி மாநகரில் இருவா் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருநெல்வேலி வி.எம் சத்திரம் ஆரோக்கியநாதபுரத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் மரியசெல்வம் (எ) செல்வம் (36). வேலாயுதம் மகன் குமாா் (எ) முத்துக்குமாா் (47). இவா்கள் இருவரையும் கொலை வழக்கில் போலீஸாா் கைது செய்தனா். இவா்களை குண்டா் சட்டத்தில் கீழ் சிறையிலடைக்க, திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) எஸ்.விஜயகுமாா் பரிந்துரைத்தாா்.
இதையடுத்து, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் ரூபேஷ்குமாா் மீனா உத்தரவின்பேரில் இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைத்தனா்.