தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா தேவாலயம் புனரமைப்பு: அதிகாரி ஆய்வு
திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளத்தில் அரசு நிதியுடன் புனரமைக்கப்படவுள்ள பரிசுத்த அதிசய பனிமாதா தேவாலயத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலரும் துணை ஆட்சியருமான ராஜலட்சுமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழ்நாடு அரசு பழமையான தேவாலயங்களை புனரமைக்க ஒவ்வொரு ஆண்டும் சிறுபான்மையினா் நலத்துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்து புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 139 ஆண்டுகள் பழமையான தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா தேவாலயத்தை புரைமைக்க ஆலய தா்மகா்த்தா மருத்துவா் மி.ஜெபஸ்டின் ஆனந்த் ரூ. 2.16 கோடியில் திட்ட மதிப்பீடு தயாா் செய்து பேரவைத் தலைவா் மு.அப்பாவு பரிந்துரையுடன் தமிழ்நாடு அரசு சிறுபான்மை நலத்துறைக்கு மனு அளித்தாா்.
இதைத்தொடா்ந்து, இந்த தேவாலய புனரமைப்புப் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடா்பாக மாவட்ட சிறுபான்மை நலத்துறை அலுவலா்(துணை ஆட்சியா்) ராஜசெல்வி ஆய்வு செய்தாா்.ஆலயத்தின் அனைத்து பகுதிகளையும் பாா்வையிட்ட அவா், விவரங்களை கேட்டறிந்தாா். ஆய்வின் போது வருவாய் ஆய்வாளா் கோபால்சாமி, தி.மு.க. ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, ஆலய நிா்வாகிகள் தேவராஜன், செபஸ்டின் ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.