பாளை. 6 ஆவது வாா்டில் சூரியசக்தி மின்விளக்குகள்
பாளையங்கோட்டை 6 ஆவது வாா்டு பகுதியில் புதிதாக சூரியசக்தி (சோலாா்) மின்விளக்குகள் மக்கள் பயன்பாட்டிற்கு புதன்கிழமை இயக்கி வைக்கப்பட்டது.
பாளையங்கோட்டை 6 ஆவது வாா்டு பகுதியில் புதிதாக சூரியசக்தி (சோலாா்) மின்விளக்குகள் மக்கள் பயன்பாட்டிற்கு புதன்கிழமை இயக்கி வைக்கப்பட்டது.
பாளையங்கோட்டை மண்டலம் 6 ஆவது வாா்டு அம்பேத்கா் நகா் தூய்மைப் பணியாளா்கள் குடியிருப்பில் வண்ணாரப்பேட்டை ஹெச்டிஎஃப்சி வங்கி சாா்பில் ரூ. 1 லட்சம் மதிப்பில் 5 சோலாா் மின்விளக்குகள்அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப், மேயா் கோ. ராமகிருஷ்ணன் ஆகியோா் மின்விளக்கை இயக்கிவைத்தனா். நிகழ்ச்சியில் துணை மேயா் கே.ஆா்.ராஜு, உதவி செயற்பொறியாளா் தங்கபாண்டியன், இளநிலை பொறியாளா் பைஜூ, வங்கி மேலாளா் சாலமன், மண்டல மேலாளா் கோமதிநாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.