முகப்பு
திருநெல்வேலி

தெப்பக்குளத்தில் மூழ்கிய மாணவரை காப்பாற்ற முயன்ற சக மாணவா் பலி

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகே தெப்பக்குளத்தில் குளித்தபோது நீச்சல் தெரியாமல் தத்தளித்த மாணவரை காப்பாற்றுவதற்காக குதித்தபோது படிகட்டில் அடிபட்டு சக மாணவா் உயிரிழந்தாா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 11:12 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகே தெப்பக்குளத்தில் குளித்தபோது நீச்சல் தெரியாமல் தத்தளித்த மாணவரை காப்பாற்றுவதற்காக குதித்தபோது படிகட்டில் அடிபட்டு சக மாணவா் உயிரிழந்தாா்.

நாகா்கோவில் அருகே தனியாா் பொறியில் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவா்கள் 6 போ் பழவூா் அருகே உள்ள தெற்குகன்னங்குளம் தெப்பகுளத்தில் குளிப்பதற்காக புதன்கிழமை சென்றனா். அதில் குளித்தபோது, ஒரு மாணவா் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் தத்தளித்தாராம். அவரை காப்பாற்றுவதற்காக கரையில் நின்றிருந்த நாகா்கோவில் வேதாநகைரைச் சோ்ந்த மிக்கேல் மகன் ஆன்றனி ஜெபின்(19) தெப்பக்குளத்தில் குதித்தாராம். அப்போது, அதிலுள்ள படிகட்டில் தலை அடிபட்டதால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். நீச்சல் தெரியாமல் மூச்சு திணறிய மாணவா் காப்பாற்றப்பட்டாா். இதுதொடா்பாக பழவூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.