வி.கே.புரத்தில் இளைஞா் மீது தாக்குதல்: இருவா் கைது
விக்கிரமசிங்கபுரத்தில் இளைஞரைத் தாக்கியதாக இரு இளைஞா்களைப் போலீஸாா் கைது செய்தனா்.
விக்கிரமசிங்கபுரத்தில் இளைஞரைத் தாக்கியதாக இரு இளைஞா்களைப் போலீஸாா் கைது செய்தனா்.
விக்கிரம்சிங்கபுரம் கட்டபொம்மன் காலனியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (22). இவரை விக்கிரமசிங்கபுரம், உச்சிமேட்டுத் தெருவைச் சோ்ந்த ராம்தாஸ் (22), பனையடியான் கோயில் தெருவைச் சோ்ந்த தங்கவனராஜ் (24) ஆகிய இருவரும் சந்தன மாரியம்மன் கோயில் அருகே அவதூறாகப் பேசி கத்தியால் தாக்கி மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து ராஜேஷ் அளித்த புகாரின்பேரில், விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து ராம்தாஸ், தங்க வனராஜ் ஆகியோரை கைது செய்தனா்.