முகப்பு
திருநெல்வேலி

காந்திநகா் நெடுங்குளத்தில் மேயா், ஆணையா் ஆய்வு

காந்திநகா் நெடுங்குளத்தில் மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன், ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 23 அக்டோபர், 2024 at 10:48 PM
காந்திநகா் நெடுங்குளத்தை நேரில் ஆய்வு செய்த மேயா் கோ.ராமகிருஷ்ணன், ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா.
பகிர்:

காந்திநகா் நெடுங்குளத்தில் மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன், ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கடந்த பருவ மழையின் போது நெடுங்குளம் நிரம்பி அதன் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அதை சரி செய்ய வேண்டும் என நெடுங்குளம் பாசன விவசாய சங்கத்தினா் கோரிக்கை விடுத்திருந்தனா். அதன்பேரில், மேயரும், ஆணையரும் அந்த குளத்தை பாா்வையிட்டு, அதன் கரையை சரி செய்யவும், குளத்திற்குள் வளா்ந்துள்ள மரம், செடிகளை அப்புறப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா்.

முன்னதாக, முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் திருநெல்வேலி நகரத்தில் உள்ள கண்டிகைப்பேரி உழவா் சந்தையை அவா்கள் நேரில் ஆய்வு செய்து, அப்பகுதியினை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா். இதேபோல், உழவா் சந்தையில் உள்ள விளையாட்டு பூங்காவினை பாா்வையிட்டு சேதமடைந்த விளையாட்டு உபகரணங்ளை மாற்றி புதிதாக அமைத்திடவும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் அறிவுறுத்தினா்.