முகப்பு
திருநெல்வேலி

காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

திருநெல்வேலியில் காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 23 அக்டோபர், 2024 at 10:48 PM
குறைதீா்க்கும் கூட்டத்தில் மக்களிடம் மனுவைப் பெற்று விசாரிக்கிறாா் ஆணையா் ரூபேஷ் குமாா் மீனா.
பகிர்:

திருநெல்வேலியில் காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாநகர காவல் ஆணையா் ரூபேஷ்குமாா் மீனா தலைமை வகித்து மனு பெற்றாா். 12 போ் பங்கேற்று புகாா் மனுக்களை அளித்தனா். மனுக்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீா்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என அவா் உறுதியளித்தாா். காவல் துணை ஆணையா்கள் (மேற்கு) கீதா, (கிழக்கு) விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் முகாமில் காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசனிடம் 24 போ் அளித்தனா். அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறை அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.